வெள்ளி, 9 ஏப்ரல், 2010

வாழ்க்கை தத்துவம்...

காதல்...

இந்த மூன்று எழுத்துக்கு தான் எத்தனை சக்தி,எத்தனை சந்தோசம், எத்தனை துக்கம்,  எத்தனை போராட்டம், எத்தனை சண்டை....
இறுதியில், வெல்வது காதல்.

காதலை வரிசையாக சொல்கிறேன் (பாடுகிறேன்)...
அவன்:
கண் முன்னே எத்தனை நிலவு காலையிலே...
காதல் வளர்த்தேன், காதல் வளர்த்தேன்,...
என் காதல் சொல்ல நேரமில்லை...
காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு.....வந்ததா.....
என்ன சொல்ல போகிறாய்...என்ன சொல்ல போகிறாய்...
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்...

அவள்:
காதல் சொல்வது உதடுகள் அல்ல, கண்கள் தான் தலைவா...

அவன்:
சாமி கிட்ட சொல்லி வச்சு சேர்ந்தது இந்த செல்ல கிளியே...
உள்ளமே உனக்குத்தான்... உசிரே உனக்குத்தான்....

பிறகு...
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே....
கல்யாண தேன் நிலா, 

இனி.... இரண்டு பாகமாக பிரிகிறது...

முதல் பாகம்:
அவன்: வளையோசை கேட்டு எழுந்து...
அவள்: காலங்காத்தாலே இம்சை பண்ணாதே...
அவன்: சிந்திய வெண் பனி சிப்பியில் முத்தாச்சு....

(இவர்கள் வாழ்கையில்) என்றென்றும் புன்னகை...முடிவில்லா புன்னகை...

2 ஆம் பாகம்:
அவன்: 
மன்றம் வந்த தென்றலுக்கு, மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ...
தனியே தன்னந் தனியே...நான் காத்து காத்து நின்றேன்..
எங்கே அந்த வெண்ணிலா...எங்கே அந்த வெண்ணிலா...

இறுதியில்....
நான் போகிறேன் மேலே மேலே.....


இந்த இரண்டு பாதையில், ஒரு பாதையின் ஆரம்பம், உங்கள் மனதில் உள்ளது.
உங்கள் வாழ்கை, உங்கள் கையில்...

நீங்கள் காதலை வாழ வைத்தால், காதல் உங்களை வாழ் வைக்கும்...

நன்றியுடன்,
மதி...

வியாழன், 8 ஏப்ரல், 2010

அன்பிற்கு அறிமுகம் தேவையா...

அம்மா....

இந்த சொல்லில் இருந்து தான் நான் இப்பூவுலகிற்கு அறிமுகம் ஆனேன். அதே சொல்லை முதன்மையாக கொண்டு உங்களிடமும் அறிமுகம் ஆகிறேன்.

இனிய வணக்கம். நான் மதி. ஆங்கிலம் உச்சரிக்கும் வேலை. காதல் பற்றி பல வலை பதிவுகள் இருந்தபோதிலும், எதுவும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை.

நான் இந்த பதிவில் சில நடப்புகளை பதிவு செய்ய விழைகிறேன்.

மீண்டும் வருகிறேன்....
நன்றி....